ஊரப்பாக்கம் ஸ்ரீ ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை;பிப்,7- ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ தேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா 7-ந்தேதி திங்களன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஊ.கோ. பெருமாள் , ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், மன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்களும் மற்றும் ஊர்பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக ஸ்ரீ ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள், கருடன், பக்த ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்கிரிவர், விஷ்ணு, துர்க்கை, வைஷ்ணவி, சாமுண்டீஸ்வரி, பரமபத மூர்த்தி, நவகிரகம், பிராமி, வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சாமி, வினாயகர், முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நித்தியானந்தம் சார்பில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை புரோகிதர் மதுசூதனன் பட்டாச்சாரியார் மற்றும் ஆலய நிர்வாக குழுவினரும் கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.