ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு: ஜெயலலிதா இரங்கல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.- 25 - புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அன்பையும், மனிதநேயத்தையும் மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்ய தன் வாழ்நாளை அர்ப்பணித்த புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணற்ற இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும், இன்ன பிற மக்கள் நலப் பணியாற்றும் அமைப்புகளையும் உருவாக்கி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ஏழை, எளியோர்க்கும் அரும் பணியாற்றியவர் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா. அவருடைய மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு. புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா அவர்களை இழந்து வாடும் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.