பிளஸ் 2 தேர்வு முடிவு அறிவிப்பு: தங்கம் தென்னரசு கண்டனம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.- 25 - பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளது தன்னிச்சையான முடிவாகும் என தங்கம் தென்னரசு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து மாணவர்களிடையேயும், பெற்றோரிடமும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி முடிவடைந்து தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துவரும் பிளஸ் 2 முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கல்வித்துறை செயலாளர் சபீதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றபோது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 14ம் தேதி வெளியாகும் என்றார். இதுவே அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும் கருதப்பட்டது. ஆனால், இதற்கிடையில் நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வித்துறை செயலாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறியதாவது: பிளஸ் 2 தேர்வுகள் முடிந்ததும், மார்க்குகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும், கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கமாகும். ஆனால், இம்முறை எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கல்வித்துறை செயலாளர் அறிவித்திருப்பது தன்னிச்சையான செயலாகும். இதனை கண்டிக்கிறோம். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.