கருணாநிதி அவதூறு வழக்கு: ஜெயலலிதா நெடுமாறனுக்கு சென்னை கோர்ட்டு சம்மன்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 25- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் மீது சென்னை செசன்சு கோர்ட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். ஜெயலலிதா கடந்த 13-ந் தேதி, மற்றும் 14-ந் தேதி அறிக்கைகள் வெளியிட்டு இருந்தார். ஒரு அறிக்கையில் தேர்தலில் தி.மு.க. ரவுடிகளை வைத்து அராஜம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறி இருந்தார். இன்னொரு அறிக்கையில் துணை ராணுவப் படையினருக்கு கருணாநிதியின் உத்தரவின் பேரில் தினப்படி குறைக்கப்பட்டு இருப்பதாக கூறி இருந்தார். இந்த 2 அறிக்கைகள் தொடர்பாகவும் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. பழ.நெடுமாறன் புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் தி.மு.க. தில்லுமுல்லு செய்ய முடியவில்லை என்று கருணாநிதி நினைக்கிறார் என்று கூறி இருந்தார். இது தொடர்பாகவும் கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த 3 வழக்குகளும் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவும், நெடுமாறனும் கோர்ட்டில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தர விட்டார். ஜெயலலிதா ஜூன் 21-ந் தேதியும், நெடுமாறன் ஜூன் 20-ந் தேதியும் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.