3 ஆயிரம் இருக்கைகளுடன் குளிர்சாதன கலை அரங்கம் ஷெனாய் நகரில் 2 மாதத்தில் திறப்பு: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 25- சென்னை மாநகராட்சி சார்பில் ஷெனாய் நகரில் கட்டப்பட்டு வரும் குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன கலையரங்கத்தை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த கலையரங்கம் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. 61 ஆயிரத்து 757 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் 2 ஆயிரம் இருக்கைகளுடன் பிரமாண்டமான அரங்கமும் இடைத்தளம், முதல் தளத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் சிறிய அரங்கங்களும் அமைந்துள்ளது. அனைத்து அரங்கங்களும் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. 4 லிப்ட் வசதி செய்யப்படுகிறது. 200 கார்கள், 250 இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. பூச்சு வேலை, தளம் போடு தல், மின்வசதி செய்தல், இருக்கைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் 2 மாதத்தில் திறக்கப்படும். மொத்தம் ரூ.17 கோடியே 28 லட்சம் செலவில் இந்த கலையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப் பிரமாண்டமான அரங்கமாக விளங்கும். கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது தலைமை பொறியாளர் விஜயகுமார், ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மேற்பார்வை பொறியாளர் குமரேசன், செயற் பொறியாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.