திருவரங்குளம் அரங்குளநாதர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுக்கோட்டை,பிப்;17 திருவரங்குளம் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அரங்குளநாதர் சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று பெண்களின் மங்கல குரவை ஒலி விண்ணதிர பக்திபரவசத்துடன்கோலாகலமாக நடந்தது. புதுக்கோட்டை அடுத்த திருவரங்குளத்தில் உள்ளது அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் சுவாமி திருக்கோவில். திருக்கோவில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்கோவிலில் பக்தர்கள் நிதி உதவியுடன் திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்றுக்காலை ஆறுமணிக்கு வேதமந்திரங்கள் முழங்க ஆறாங்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. மஹா பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் 9.30 மணிக்கு புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. சரியாக 10.10 மணிக்கு அருள்மிகு அரங்குளநாதர், பெரியநாயகி அம்பாள் மூலஸ்தான கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரம் மீது அமைக்கப்பட்டுள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சர்வசாதகம் செய்தனர். முன்னதாக கடம்புறப்பாடு முடிந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோபுரங்களை அடைந்ததும் கோவிலை சுற்றி மூன்றுமுறை கருடன் வலம்வந்தது. இதை பார்த்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்தால் அம்மா, தாயே, அரங்குளநாதா என குரல் எழுப்பினர். பக்தர்களின் சரணம் கோஷமும், பெண்களின் மங்கல குரவையும், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களும் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது. கும்பாபிஷேகத்துக்கு கருட பகவான் அனுமதி வழங்கிய மகிழ்ச்சியில் கோபுர கலசங்கள் மீது வேதமந்திரங்களை உச்சரித்தவாறு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றிய சம்பவம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணிக்குழு தலைவர் புஷ்பராஜ், கௌரவத் தலைவர் ராமச்சந்திரன் செட்டியார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.