சென்னை சௌக்கார்பேட்டை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

| [ திரும்பி செல்ல ]

சென்னை, மே.2- சென்னை சௌக்கார்பேட்டை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 01.05.2011 ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது. பரம்பொருள் ஜோதி வடிவம் ஆனவரும் அண்ட சராசரங்களை படைத்து காத்து அருள்பவரும், வேண்டுவோருக்கு வேண்டுவதை வாரி வழங்குபவரும் அகார, உகார, மகார நாத பிந்து பஞ்ச ப்ரவண சொருபமானவரும் ஓங்கார வடிவமானவரும் தன்னை அண்டியவருக்கு தருமம், கர்த்தம், காமம், மோட்சம் போன்ற பதினாறு பேறுகளை வழங்கி அருள்பாலிப்பவரும் சென்னை ஸ்ரீ மல்லஸ்வரர், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீகமடேஸ்வரர் (ஸ்ரீகாளிகாம்பாள்), ஸ்ரீகச்சாலஸ்வர் ஆகிய ஆலயங்களில் மையமாக இருப்பவரும் சென்னை சௌகார்பேட்டை, காளத்திபிள்ளை தெருவில் வீற்றி இருப்பவரும் ஸ்ரீ விநாயக முதலான பரிவார மூர்த்திகளோடு கூடியவரும் ஸ்ரீ உண்ணாமலை அம்மையோடு வீற்று இருக்கின்ற ஸ்ரீ அருணாசலேஸ்வரர் பெருமானுக்கு சித்திரைமாதம் 18-ம் தேதி 01.05.2011 ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர வியயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் குரு வருளும் திருவருளும் துணை செய்ய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வைபத்தை சர்வசாதகம் டாக்டர்உமாபதி சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற்றனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம், அறங்காவலர் குழு, அருள் மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் இறை பணி மன்றம் மற்றும் வக்கீல் சூரிய நாராயணா அன்பு, அர்ஜீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.