காட்பாடியில் வீடு இடிந்து பலியானவர்கள் தலா ரூ.1 லட்சம் நிதி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப்.9- காட்பாடியில் வீடு இடிந்து பலியானவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய் வீதமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றுசட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு சட்டசபையில் நேற்று முதல்- அமைச்சர் கருணா நிதி பேசியதாவது:- இன்றையதினம் விடியற் காலையில் -வேலூர் மாவட்டம், நமது சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தொகுதிக்கு உட்பட்ட கழிஞ்சூர் மதுரா கோபாலபுரம், ஜான் சாலமன் காலனியில், கதவிலக்கம் 4ஆம் எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் கார்த்திகேயனுக்கு சொந்தமான இல்லத்தில்- எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்து விழுந்ததோடு- அந்த வீட்டில் குடியிருந்த ஒன்பது நபர்களில் 4 பேர் அங்கேயே மடிந்திருக்கிறார்கள். மற்றவர்கள் படுகாயமடைந்த நிலையிலே மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் குறித்து ஞானசேகரன் மாத்திரமல்ல; சட்டத்துறை அமைச்சர் அவர்களும் எனது கவனத்திற்குக் காலையிலேயே கொண்டு வந்துள்ளார். விபத்தில் சிக்கி மாண்டவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையிலே உள்ளவர்கள் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டுமென்றும் எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய் வீதமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.