அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது வகுப்புக்கு வராத மாணவனுக்கு அதிக மார்க்: தனியார் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகிகளிடம் விசாரணை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மே.7- திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு முறை கூட வகுப்புக்கே வராத அருண்குமார்ரெட்டி என்ற மாணவனுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது என அதே கல்லூரி மாணவி ஒருவர் அண்ணா பல்கலைகழகத்திடம் புகார் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மாணவர் வகுப்புக்கு வராததோடு தேர்வும் எழுதவில்லை. வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களும் அவரை இதுவரை பார்த்தது கூட இல்லை என்றும் புகார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று நடத்திய ஆய்வில் புகார் உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அமைத்தது. சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள் இந்த குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அந்த தனியார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை குறித்த தகவலை தெரிவிக்க அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.