உலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 370 ரன் குவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

டாக்கா, பிப்.19- இந்திய அணி வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் குவித்தது. 14 அணிகள் பங்கேற்கும் 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-வங்காள தேசம் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க விரர் சேவாக் அபாரமாக விளையாடி 140 பந்தில் 175 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகளும் 5 சிக்சரும் அடங்கும். உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சேவாக் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்திய வீரர்களில் சேவாக் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கங்குலி(183) உள்ளார். வீரட் கோக்லி சதம் சிறப்பாக 83 பந்தில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை. கோக்லி அறிமுக உலக கோப்பை போட்டியில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது ஆகும். காம்பிர் 39 ரன்களும், தெண்டுல்கர் 28 ரன்களும் எடுத்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.