சென்னையில் உலககோப்பை கிரிக்கெட்: கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப்.20- சென்னையில் உலககோப்பை கிரிக்கெட்சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-கென்யா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 23.5 ஓவர்களில் 68 ரன்களுக்கு சுருண்டது. செரன் வாட்டர்ஸ் (16 ரன்), ராகெப் பட்டேல் (16 ரன்), காலின்ஸ் ஒபுயா (14 ரன்) தவிர யாரும் இரட்டை இலக்க ரன்னை தொடவில்லை. நியூசிலாந்து அணி தரப்பில் பென்னட் 4 விக்கெட்டுகளும், சவுதி, ஓரம் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கப்தில் 39 ரன்களுடனும், மெக்கல்லம் 26 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.