பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 20- பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.15 மணிக்கு இறந்தார். பிரபல சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன். 16 வயதினிலே படத்தில் ?ஆட்டுக்குட்டி முட்டையிட்டு? என்ற பாடல் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனார். தொடர்ந்து சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். வில்லனாகவும், குணசித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையிலிருந்த அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.15 மணிக்கு இறந்தார். அவரது உடல் சாலி கிராமம் கம்பர் தெருவில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. மலேசியாவில் பிறந்து சென்னையில் சினிமா வாய்ப்புதேடி கோடம்பாக்கத்தில் கால்பதித்து டெல்லி டூ மெட்ராஸ் படம் மூலம் பாடகராக அறிமுகம் ஆனார். அவர் தமிழில் 8 ஆயிரம் பாடல்களும், மற்ற மொழிகளில் 4 ஆயிரம் பாடல்களும் பாடி உள்ளார். இவரது மகன் யுகேந்திரன், மகள் நிஷாந்தினி ஆகியோரும் பின்னணி பாடகர்களாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னரே பக்கவாத நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியா வாசுதேவன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.