சென்னையில் யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ மாநாட்டு தினம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,பிப்.20- யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ மாநாட்டு தினம் சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. ஏராளமானோர் பங்குபெற்று பலன் அடைந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்திர விசேஷ மாநாடு 1நாள், 2நாள், 3நாள் என மூன்று முறை நடைபெறுவது வழக்கம். அதன்படி யெகோவாவின் வருடாந்திர விசேஷ 1நாள் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று எழுச்சியாக நடைபெற்றது. இம் மாநாட்டில் துயரம், நோய், பல்வேறு பிரச்சனை ஆகியவைகளில் சிக்கி இக்கட்டான நிலைமையில் உள்ளவர்கள் கடவுளிடம் எப்படி தஞ்சம் புகுந்து அவரின் சுபிட்ஷத்தை பெறுவது என்பது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் உலகலாவிய அமைப்பின் வாகம் அவர்கள் சென்னையில் இந்த பிரசங்கத்தை நடத்தினார். இவர் உலகம் முழுவதும் உள்ள 236-நாடுகளில் பைபிளுக்கு இசைய இப்பிரசங்கத்தை நடத்தி வருகிறார். சென்னையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெற்றோர், குழந்தைகள், முதியோர் என ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.