துளசியின் அழகு குறிப்புகள்...

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

1துளசியின் அழகு குறிப்புகள்... அழகுப் பொருட்களை உற்பத்தி செய்கிற நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு பல அழகு பலன்கள் நிரம்பியது துளசி! பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது! அதற்கு சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து, பருக்கள் மீது தடவி... ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்! ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும். 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள். கூந்தல் மிருதுவாகும். பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசுவென முடி வளரும். கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க... தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.