உலக கோப்பை அணியில் ஸ்ரீசாந்த் ;காயம் காரணமாக பிரவீண் குமார் நீக்கம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

டில்லி:பிப்,9 ஸ்ரீசாந்த் பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. உலக கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். காயம் காரணமாக உலக கோப்பை இந்திய அணியில் இருந்து பிரவீண் குமார் நீக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க தொடரின் போது காயமடைந்த சச்சின் (தொடையின் பின் பகுதி), சேவக் (தோள் பட்டை), காம்பிர் (கை விரல்) போன்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக மீண்டு வருகின்றனர். ஆனால் வலது முழங்கையில் காயம் அடைந்த பிரவீண் குமாரின் நிலை பரிதாபமாகியுள்ளது. உலக கோப்பை பயிற்சி போட்டியில் (பிப். 13) பங்கேற்க உள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் பிரவீண் குமார் தேர்வாகவில்லை. இவருக்குப் பதிலாக ஸ்ரீசாந்த், தனது உடற்தகுதியை நிரூபிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தார். பிரவீண் நீக்கம்: இதனிடையே காயம் சரியாகாத பிரவீண் குமார் இங்கிலாந்து சென்று, பிரபல டாக்டரிடம் சிகிச்சை எடுக்க இருப்பதால், உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.சி.சி., அனுமதி: இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயலர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில்,\"\" முழங்கை காயம் காரணமாக பிரவீண் குமார் உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இவருக்குப்பதிலாக, இந்திய அணியில் ஸ்ரீசாந்தை தேர்வு செய்வது என, அணித் தேர்வுக்குழுவினர் முடிவு செய்தனர். இதனை ஐ.சி.சி.,யிடமும் தெரிவித்து விட்டோம்,\'\' என்றார். பின்னர், ஸ்ரீசாந்த் தேர்வை, ஐ.சி.சி., ஏற்றுக்கொண்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.