ஐபிஎல் 7: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், பிராவோ நீடிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஐபிஎல் 7வது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி உள்ளிட்ட 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் 7வது சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாகவே பழைய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள இன்றுதான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டோணி தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பார் டோணியுடன் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின் மற்றும் பிராவோ ஆகியோர் அணியில் நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்7வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பழைய வீரர்களை தக்க வைத்துக் கொள்வது பற்றி இதர அணிகளும் இன்று முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.