ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. உலகின் 4ம் நிலை வீராங்கனையான லீ. நா. (சீனா) தொடக்க சுற்றில் குரோஷியாவை சேர்ந்த அனாசோஜாவை எதிர்கொண்டார். இதில் லீ. நா. 62, 60 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 9ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்மிலாவை எதிர்கொண்டார். இதில் கெர்பர் 63, 06, 62, என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் டோனிலா வானுசோவா (சுலோவாக்கியா), பிலிப் கென்ஸ் (பெல்ஜியம், இரினா (அமெரிக்கா), பெலிண்டா (சுவிட்சர்லாந்து) ஆகியோர் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது 38வது தரவரிசையில் இருப்பவருமான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்க) தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். 22ம் நிலை வீராங்கனையான மகரோவா (ரஷியா) 26, 64, 64, என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2வது சுற்றுக்கு நுழைந்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.