சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக என். சீனிவாசன் தேர்வு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜூலை மாதம் அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. இன்றைய கூட்டத்தில் ஐ.சி.சி.யின் மறு சீரமைப்புக்கு ஒப்புதல் பெறப்பட்டது. 8 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் இலங்கை, பாகிஸ்தான் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. மறு சீரமைப்பு ஒப்புதல் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெறுகிறது. மேலும் இந்த 3 நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.சி.சி.யின் நிதியை அதிகமாக பெறும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.