பெங்களூர் அணியில் யுவராஜ்சிங்கும், டெல்லி அணியில் தினேஷ் கார்த்திக் 12.5 கோடிக்கும் ஏலம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

7வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் தற்போது நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த 514 வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் ரூ.275 கோடிக்கு வீரர்களை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்கின்றன. ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு: * 7வது ஐ.பி.எல். தொடருக்கான முதல் வீரராக முரளி விஜய்யை டெல்லி அணி 5 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. * மேலும் டெல்லிக்கான அடுத்த வீரராக கெவின் பீட்டர்சன் 9 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கெவின் பீட்டர்சனை ஏலம் எடுக்க அனைத்து அணிகளுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. *அதிகபட்சமாக யுவராஜ்சிங்கை பெங்களூர் அணி 14 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. * இலங்கை வீரர் ஜெயவர்தனேவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்கஸ் காலீஸ் கொல்கத்தா அணியில் 5.5 கோடிக்கு ஏலம் போனார். * இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரான வீரேந்திர சேவாக்கை 3.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. * ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரான டேவிட் வார்னரை முதல் வீரராக சன் ரைசர்ஸ் அணி 5.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. *ஆஸ்திரேலிய அணியின் ஜார்ஜ் பெய்லியை பஞ்சாப் அணி 3.25 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. * மேற்கு இந்தயத் தீவுகள் அணியின் கேப்டனும் ஆல் ரவுண்டருமான டேரன் சமியை 3.50 கோடிக்கு சன் ரைசர்ஸ அணி தேர்வு செய்துள்ளது. * தென் ஆப்பிக்காவின் டூபிளஸ்சிஸ்ஸை சென்னை அணி 4.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. * தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை 12.5 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. * நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 3.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. *ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸியை 5 கோடிக்கு மும்பை அணி தேர்வு செய்துள்ளது. * இந்தியாவின் அமித் மிஸ்ராவை 4.75 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. * இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானை 2.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. * இந்தியாவின் புஜாரா 1.9 கோடிக்கு பஞ்சாப் அணியில் இடம்பிடித்தார். * தென் ஆப்பிரிக்காவின் டூமினி 2.2 கோடிக்கு டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டார். * இந்தியாவின் ராபின் உத்தப்பா 5 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டார். * ஆஸ்திரேலியா அணியின் பிராட் ஹாட்ஜ் 2.4 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டார். * ஆஸ்திரேலியா அணியின் ஷான் மார்ஷ் 2.2 கோடிக்கு பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டார். * இந்தியாவின் மனோஜ் திவாரி 2.8 கோடிக்கு டெல்லி அணியில் இடம்பிடித்தார். * மேற்கு இந்தயத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான டுவானே ஸ்மித்தை 4.5 கோடிக்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது. இலங்கை வீரர் ஜெயவர்தனேவை, தொடர்ந்து நியசிலாந்து வீரர் ராஸ் டெய்லரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டீ காக் 3.50 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பிடித்தார். *இந்தியாவை சேர்ந்த சாகா 2.20 கோடிக்கு பஞ்சாப் அணியில் இடம் பிடித்தார். *இந்தியாவை சேர்ந்த பார்த்திவ் பட்டேல் 1.4 கோடிக்கு பெங்களூரு அணியில் இடம் பிடித்தார். *ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் 4 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்தார். * இந்தியாவின் யூசுப் பதான் 3.25 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். * இலங்கையின் திஷாரா பெராரே 1.6 கோடிக்கு பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டார். * தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஆல்பி மோர்கெல் 2.4 கோடிக்கு பெங்களூர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். * ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹஸி எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை. * ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹஸியை தொடர்ந்து இலங்கையின் மேத்யூசும் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை. * இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான இர்பான் பதான் 2.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். * இலங்கையின் தில்ஷான் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹாசன் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்தார். * ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான அசோக் திண்டா 1.5 கோடிக்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.