ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்தில் 25ந்தேதி தொடக்கம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 25ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 8ந்தேதி வரை ஆசிய கோப்பை போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பதுலுல்லா, மிர்பூர் ஆகிய 2 இடங்களில் போட்டி நடக்கிறது. 25ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை 26ந்தேதி எதிர்கொள்கிறது. 28ந்தேதி இலங்கையுடனும், மார்ச் 2ந்தேதி பாகிஸ்தானுடனும், 5ந்தேதி ஆப்கானிஸ்தானுடனும் இந்தியா அணி மோதுகின்றன. இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்தது. இதை சரிகட்டும் வகையில் ஆசிய கோப்பையில் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.