உலகின் மிக வயதான ஜப்பான் பெண்மணிக்கு இன்று 116வது பிறந்த நாள்.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

உலகின் மிக வயதான பெண்மணி என்ற பெயர் பெற்ற ஜப்பான் நாட்டின் முதிய பெண் ஒருவர் இன்று தனது 116வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜப்பான் நாடு முழுவதும் அந்த முதிய பெண்மணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் நாட்டின் Misao Okawa, என்ற பெண், இன்று மார்ச் 5 தினத்தின் தனது116வது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார். இன்றைய பிறந்த நாள் தினத்தின் அதிக நாட்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வது எப்படி என்ற தனது ரகசியத்தையும் அவர் கூறியுள்ளார். ஒரு நாளுக்கு மூன்று வேளை ஆரோக்கியமான உணவு மற்றும் குறைந்த்து எட்டு மணி நேர இடையூறு இல்லாத தூக்கம், இவையிரண்டும் இருந்தால் கண்டிப்பாக நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடு உயிர் வாழலாம் என அவர் தனது தலைமுறையினர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். தனது வாழ்நாள் காலத்தில் 1897ஆம் நடந்த பிரிட்டன் ராணி விக்டோரியாவின் பதவியேற்பு விழா, 1898ஆம் ஆண்டு நடந்த ஸ்பெயின் அமெரிக்க போர் போன்ற நிகழ்ச்சிகளை அவர் செய்தியாளர்களிடம் நினைவு கூறியுள்ளார். உலகின் மிக அதிக வயதான பெண் என பெயர் பெற்றிருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த Jireomon Kimura என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் இறந்துவிட்டார். அதன் பிறகு Misao Okawa, உலகின் மிக வயதான பெண் என முறையாக அறிவிக்கப்பட்டார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.