ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பு என செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனம் மீது தோனி வழக்கு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூ100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி வழக்கு தொடர்ந்துள்ளார். 6 வது ஐபிஎல் தொடரில் சூதாட்ட விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தமக்கு எதிராக அவதூறு செய்தி பரப்பி வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதனால் தமக்கு ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமனறம் அவதூறு செய்தி வெளியிட தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.