அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவு 27-ம் தேதி தொடக்கம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்துக்களின் புனித ஸ்தலமான அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஹெலிகாப்டர் முன்பதிவு குறித்து இன்று அமர்நாத் கோவில் வாரிய முதன்மை செயலர் நவீன் கே சௌத்ரி கூறியதாவது:- அமர்நாத்திற்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவை 17ம் தேதி தொடங்க கோவில் வாரியம் முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது இத்தேதி இம்மாதம் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முன்பதிவு வசதி 27ம் தேதி காலை 10மணி முதல் தொடங்கும். இதற்கு ஒரு நாள் கட்டணமாக ரூ.1950 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் வங்கிகள் மூலம் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவர்கள், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த மருத்துவச் சான்றிதழை சமர்பிப்பது அவசியமாகும். கடன் அட்டை அல்லது வரவு அட்டை வைத்திருப்பவர்கள் அதன் மூலம் 5 நபர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அடுத்த மூன்று வாரங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய அந்த அட்டைகளை பயன்படுத்த இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.