ஸ்ரீனிவாசன் பதவி விலக வேண்டும் : உச்ச நீதிமன்றம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஐபிஎல் சூதாட்டம் வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் என்.ஸ்ரீனிவாசன், பதவி விலக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரனையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெளரவ தலைவர், குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட பலர் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில், ஐபிஎல் முறைகேடு மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும் என்றால், பிசிசிஐ பொறுப்பில் இருந்து என்.ஸ்ரீனிவாசன் விலக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், என்.ஸ்ரீனிவாசன் விலக வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.