இனி இரவிலும் கோல்ப் விளையாடலாம். ஒளிரும் பந்துகள் அறிமுகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மில்லியனர்களின் பொழுது போக்கு விளையாட்டாக உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஒன்றுதான் கோல்ப். இந்த கோல்ப் விளையாட்டு பகலில் மட்டுமே விளையாட முடியும், இதில் பயன்படுத்தப்படும் பந்து மிகவும் சிறியதாக இருப்பதாலும், பந்தை வெகுதூரத்தில் இருந்து அடித்து இலக்கை அடைய இருப்பதாலும், இந்த விளையாட்டில் இரவு என்பதே கிடையாது. ஆனால் அமெரிக்காவில் உள்ள U.S. company Night Sports என்ற விளையாட்டு நிறுவனம் கோல்ப் விளையாட்டை இரவில் கூட விளையாடும் வண்ணம் ஒளிரும் வண்ணப்பந்துகளை தயார் செய்துள்ளது. பந்தை ஒருமுறை அடித்தால் போதும், தொடர்ந்து எட்டு நிமிடங்களுக்கு பந்து பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டே இருக்கும். அதை வைத்து அந்த பந்து இலக்கை நோக்கி சென்றுள்ளதா என்பதை கணிக்கலாம். இந்த புதிய பந்தை நேற்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏராளமானோர் இந்த பந்தை வாங்கி இரவு விளக்கில் விளையாடி, ஒளிர்ந்து கொண்டே பந்து செல்வதை பார்த்து அதிசயப்பட்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.