சுனில் கவாஸ்கர் இடைக்கால பிசிசிஐ தலைவர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

கடந்த ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது சூதாட்ட சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. மேட்ச்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த வேட்டையில் ஏராளமான சூதாட்ட புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு நியமித்த, ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரணை கமிட்டி 170 பக்கம் கொண்ட அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்து விட்டது. அந்த அறிக்கையில், குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்றும், 6 இந்திய வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பரபரப்பான சூழலில் ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அதில் நீதிபதி ஏ.கே.பட்நாயக், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை, என்.சீனிவாசனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுனில் கவாஸ்கர் போன்ற அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும்.7-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கும் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சையும், ராஜஸ்தான் ராயல்சையும் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான யோசனையை முன் வைத்திருப்பதால் இந்த ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்நது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், சென்னை ராஜஸ்தான் அணிகள் ஐபில்- 7 வது தொடரில் விளையாடலாம் என்று தெரிவித்தனர். மேலும், ஐபிஎல் போட்டி முடியும் வரை பிசிசிஐயை கவாஸ்கர் நிர்வாகிப்பார் என்றும் ஐபிஎல்- 7 போட்டித்தொடரை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மேலும், ஐபிஎல் நிர்வாக பணிகளை மட்டுமே கவாஸ்கர் கவனிப்பார் என்றும் இடைக்கால தலைவராக பதவி வகிக்கும் காலம் வரை அவருக்கு ஊதியம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின் பிசிசிஐ துணைத்தலைவர், பிசிசிஐ நிர்வாக பணிகளை கவனிப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.