டி20 உலக கோப்பை யாருக்கு? இறுதி போட்டியில் இன்று இந்தியா - இலங்கை பலப்பரீட்சை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் பைனலில், இந்தியா இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. மிர்பூர், தேசிய ஸ்டேடியத்தில் நடக்க உள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் வங்கதேசத்தில் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தகுதிச் சுற்றில் இரு பிரிவிலும் முதலிடம் பிடித்த வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் சூப்பர் 10 எனப்படும் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றன.இந்த சுற்றில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதின. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. மழையால் பாதிக்கப்பட்ட முதல் அரை இறுதியில் இலங்கை அணி டி/எல் விதிப்படி 27 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 3வது முறையாக டி20 உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது,இரண்டாவது அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக விளங்கும் இந்தியா, தொடர்ச்சியாக 5 வெற்றிகள் பெற்றுள்ளதால் மிகுந்த உற்சாகமாக உள்ளது. 2007ல் நடந்த அறிமுக டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த டோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது மீண்டும் கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது ரோகித், ரகானே, கோஹ்லி, ரெய்னா, டோனி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அஷ்வின் சுழல் ஜாலம் ஆட்டத்துக்கு ஆட்டம் மெருகேறிக்கொண்டே வருவதும் இந்தியாவுக்கு சாதகமான அம்சம். அதே சமயம் இலங்கை அணியும் சமபலத்துடன் கோப்பையை வெல்ல வரிந்துகட்டுவதால், இறுதிப் போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியுடன் ஓய்வு பெற இருக்கும் அனுபவ வீரர்கள் சங்கக்கரா, ஜெயவர்தனேவுக்காக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இலங்கை அணி உள்ளது. கோப்பையை வென்றால் அந்த அணி வீரர்களுக்கு போனசாக ரூ.6 கோடி வழங்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2வது முறையாக டி20 கோப்பையை வென்றால் இந்திய வீரர்களும் பரிசு மழையில் நனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அணிகள்: இந்தியா: எம்.எஸ்.டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்யா ரகானே, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஷ்ரா, புவனேஷ்வர் குமார், வருண் ஆரோன், முகமது ஷமி, மோகித் ஷர்மா. இலங்கை: லசித் மலிங்கா (கேப்டன்), சதுரங்க டிசில்வா, திலகரத்னே தில்ஷன், ரங்கனா ஹெராத், மகிளா ஜெயவர்தனே, நுவன் குலசேகரா, சுரங்கா லக்மல், ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் பெரேரா, திசாரா பெரேரா, சீக்குகே பிரசன்னா, குமார் சங்கக்கரா, சசித்ரா சேனநாயகே, லாகிரு திரிமன்னே, தினேஷ் சண்டிமால்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.