திருப்பதி 2-வது மலைப்பாதை இன்று மூடப்பட்டது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நகரி, பிப். 21- திருப்பதி 2-வது மலைப்பாதை பராமரிப்பு பணிக்காக இன்று மூடப்பட்டது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வர 2 மலைப்பாதைகள் உள்ளன. முதல் பாதை, மலைக்கு செல்வதற்கும் 2-வது பாதை மலையடிவாரத்திற்கு இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 2-வது மலைப்பாதை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. பாதை ஓரம் சில இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதையடுத்து 2-வது மலைப்பாதையை சீரமைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி இன்று 2-வது மலைப்பாதையில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டது. இதனால் 2-வது மலைப்பாதை மூடப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் முதல் பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் அங்கு போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பதி கோவிலில் இருந்த பழைய ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் புதிய ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.