நாளை மீனாட்சி திருக்கல்யாணம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக கோயில் வடக்கு, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் மீனாட்சிக்கும், சொக்கருக்கும் திருக்கல்யாணம் சனிக்கிழமை (மே 10) காலை 10.30 மணிக்கு மேல் காலை 10.54 மணிக்குள் நடைபெறுகிறது. சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணிக்கு தனியார் சார்பில் திருக்கல்யாண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரவு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், யானை வாகனத்தில் சுவாமி வீதிவுலா வருவர் மே 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. நான்கு மாசிவீதிகளில் அசைந்து வரும் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா மே 14ம் தேதி நடைபெறுகிறது
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.