மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் கள்ளழகர் மதுரை வந்தார். வழிநெடுகிலும் இருந்து 463 மண்டக படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். சித்திரை முத்திரை பாதிக்கும் அழகர் இறங்கும் வைபம் நாளை நடைபெறுகிறது. காலை 6.30 மணியளவில் தங்க குதிரையில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுகிறார். கள்ளழகருக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் மதுரைக்கு வந்ததுள்ளது. மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவாடி மற்றும் புதூரில் எதிர்சேவை நடைபெறுகிறது. இன்று மாலை மாநகராட்சி அலுவலகம் அருகே கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறயுள்ளது. மதுரையில் நாளை விடுமுறை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி மதுரை மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிகப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வைகையில் மே 24-தேதி பணி நாள் ஆக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.