சபரிமலை அய்யப்பன் கோவிலில் தடையை மீறி 2 சிறுமிகள் தரிசனம்-பரிகார பூஜை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் மிக முக்கியமானது 10 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இந்த விதிமுறைகளை அறியாமலோ இதை பின்பற்றாமலோ சபரிமலை வரும் பெண் பக்தர்கள் மலையடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்த நிலையில் சபரிமலை மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரியின் 12 வயது மகள் தடையை மீறி சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த ஒரு சிறுமியும் தடையை மீறி சாமி அய்யப்பனை தரிசனம் செய்தது தெரிய வந்தது. தேவசம் போர்டை சேர்ந்த சிலரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நடந்த தேவசம்போர்டு கூட்டத்தில் மேல்சாந்தி மற்றும் தேவசம் போர்டு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மே 14, 15 ஆகிய தேதிகளில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பரிகார பூஜை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பரிகார பூஜை செலவை மேல்சாந்தி ஏற்றுக்கொள்ள வேண்டும். சபரிமலை கோவில் நிர்வாக அதிகாரியை இடமாற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நேற்று மாலை வைகாசி மாதபூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் பரிகாரபூஜைகள் தொடங்கியது. இன்று (15ந்தேதி) 2வது நாளாக அய்யப்பன் கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெற்றது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.