மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. தூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. துளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. ஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. ரோஜாபூ பவுடர் : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். வெந்தய பவுடர்: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. நிலவாகை பவுடர்: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். கறிவேப்பிலை பவுடர்:கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. அதிமதுரம் பவுடர்: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். துத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. செம்பருத்திபூ பவுடர்: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. கரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. கீழாநெல்லி பவுடர்: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பவுடர்: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. குப்பைமேனி பவுடர்: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. பொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. மணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். சுக்கு பவுடர்: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. ஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. கஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். மருதாணி பவுடர்: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.