உலககோப்பை கிரிக்கெட்: எஞ்சிய மூன்று போட்டிகள் ஈடன் கார்டனில் நடக்கும்; ஐசிசி தலைமை அதிகாரி லார்கட் அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்ஐசிசி தலைமை அதிகாரி லார்கட் அறிவிப்பு லி, பிப்.8- ஈடன் கார்டன் ஆடுகளத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் இந்தியா-இங்கிலாந்து போட்டி பெங்களுருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஈடன் கார்டன் ஆடுகளம் ஆய்வு செய்யப்பட்டு எஞ்சி மூன்று போட்டிகளை நடத்த முடியும் என்று கள ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனவே எஞ்சிய மூன்று போட்டிகளை ஈடன் கார்டனில் நடத்த ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஹருண் லார்கட் என்று தெரிவித்துள்ளார். உலககோப்பை விளம்பரதாரர்களான ஹீன்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இதனை லார்கட் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஹீன்டாயின் இயக்குனர் எச்.டபல்யூபார்க் கலந்து கொண்டு ஹீன்டாய் சின்னம் பதித்த பேட்டை அறிமுகப்படுத்தினார். ஈடர் கார்டனில் நடக்கவிருக்கும் மூன்று போட்டியிலும் இந்திய ஆட்டம் ஏதும் இல்லை. மார்ச் 15-ந் தேதி தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து, மார்ச் 18-ந் தேதி நெதர்லாந்து-அயர்லாந்து, மார்ச் 20-ந் தேதி ஜிம்பாவே-கென்யா ஆகிய அணிகளின் போட்டிகள் நடைபெறவுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.