ஏலகிரி கோவில் கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வேலூர்;பிப்,21- ஏலகிரி, ஸ்ரீ ஏலகிரி தாயார் சமேத கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சென்னை, முகப்பேர் ஏலகிரி தாயார் அறக்கட்டளை சார்பில், 1.08 கோடி ரூபாய் மதிப்பில், வேலூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள அந்தனாவூரில், ஸ்ரீ ஏலகிரி தாயார் சமேத கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் கட்டப்பட்டு, நேற்று அக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. சென்னையை சேர்ந்த உ.வே. சுதர்சனநாச்சியார் தலைமையில், ஸ்ரீ பெரும்புதூர் ஜீயர், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கோ பூஜை, சாந்தி ஹோமம் உட்பட முக்கிய பூஜைகளை நடந்தன. பின், கருட சேவையில் சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவில் சந்திரசேகர சிவாச்சாரியார், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம் தலைவர் மோதிலால், காவேரிப்பாக்கம் ரவி, ஏலகிரி தாயார் அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள், வைதேகி, ஈஸ்வர பிரசாத், கலா பிரசாத், தாமோதரன், சுபாஷ், கேசவன், இந்திரா தேவி, ரஜினி, மனிகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.