வசந்த உற்சவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் துவங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. உற்சவ முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு வசந்த மண்டபம் வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட நீராழி மண்டபத்தில் இரவு 8.30 மணி வரை சேவை சாதித்தார். 8.30 மணிக்கு நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. வசந்த உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். உற்சவ நிறைவு நாளான 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் தங்கக் குதிரைவாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின் வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைகிறார். வசந்த உற்சவத்தையொட்டி வசந்தமண்டபத்தை சுற்றியுள்ள நீரூற்றுகளில் அதிகளவில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.