உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84 கோடி செலவழித்துள்ளது. ரூ.3,450 கோடி பரிசு இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி தொடங்கி வைக்கிறார் இந்த போட்டியை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைக்கிறார். பிரேசில்- குரோஷியா இன்றைய முதல் போட்டியில் பிரேசில் அணியும், குரோஷியா அணியும் இந்திய நேரடிப்படி இரவு 1.30 மணிக்கு மோதுகின்றன. கோல் லைன் தொழில்நுட்பம் இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக கோல் லைன் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த கருவி மூலம் எல்லை கோட்டை பந்து தாண்டியதா? இல்லையா? என்பதே நடுவர்கள் கண்டறியலாம். கோல் கம்பத்தை சுற்றிலும் 14 அதிவேக காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவி பந்து எல்லை கோட்டை கடந்து விட்டால் அடுத்த வினாடியே நடுவர் கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்துக்கு தகவல் தெரிந்து விடும். இந்த தொழில்நுட்பம் மூலம் கால் பந்து விளையாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 32 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு: குரூப்-ஏ பிரிவு ஏ பிரிவில் பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. குரூப்-பி, சி பிரிவுகள் இப் பிரிவில், ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியாவும், குரூப்-சி பிரிவில் கிரீஸ், கொலம்பியா, ஐவேரிகோஸ்ட், ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குரூப்-டி,இ பிரிவுகள் இதில் இத்தாலி, இங்கிலாந்து, உருகுவே, கோஸ் டாரிகாவும், குரூப்-இ பிரிவில், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஈக்வடார், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குரூப்-எப், ஜி பிரிவுகள் குரூப்-எப் பிரிவில் அர்ஜென்டினா, போஸ்வனியா ஹெர்சகோவா, நைஜீரியா, ஈரானும், குரூப்-ஜி பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, கானாவும், குருப்-எச் பிரிவில் பெர்ஜியம், அல்ஜியா, ரஷ்யா, தென்கொரியா ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. மைதானங்கள் அதேபோல் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனீரோவில் மரக்கா மைதானத்திலும், சவர் பாவ்லோவில் உள்ள அரினா மைதானத்திலும், பிரேசிலியாவிலுள்ள நசியோனல் மைதானத்தில், பெலோ ஹரிசோன்ட்டிலுள்ள மினிரோ ஸ்டேடியத்திலும், சல்வாடாரில் புதிதாக கட்டப்பட்ட அரினா பான்ட் நோவா ஸ்டேடியத்திலும், போர்ட்டோ அர்கிரியில் ஜோஸ் போர்ட்டோ மைதானத்திலும், பார்ட்லெசாவிலுள்ள அரினா கேஸ்டிலா ஸ்டேடியத்திலும், ரெசிபியிலுள்ள அரினா பெர்னாம் புகோவிலும், குயாபாவில் அரினா பன்டல் மைதானத்திலும், நட்டாலில் புதிதாக உருவாக்கப்பட்ட அரினா டாஸ்குனாஸ் மைதானத்திலும், மனாஸில் உள்ள அம்சோனியா மைதானத்திலும், குர்ட்டிபாவிலுள்ள அரினா டி பாய்க்டா மைதானத்திலும் நடைபெறுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.