உலகக் கோப்பை கால்பந்து: பரிதாபமாக வெளியேறிய இங்கிலாந்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து இங்கிலாந்து அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது. பிரேசிலில் நடைபெற்று வரும் 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் இத்தாலியை எதிர்கொண்டது இங்கிலாந்து. அதில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்ந்தது. 2வது போட்டியில் உருகுவேயை எதிர்கொண்டது இங்கிலாந்து. அந்தப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது இங்கிலாந்து. இந்த நிலையில் நேற்று இங்கிலாந்தை முதலில் வீழ்த்திய இத்தாலியும் கோஸ்டாரிகாவும் மோதின. அப்போட்டியில் கோஸ்டாரிகா வெற்றி பெற்றால் இங்கிலாந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இத்தாலி வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு சிறிது வாய்ப்பு இருக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் கோஸ்டாரிகாவிடம் இத்தாலி தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து இங்கிலாந்து அணி பரிதாபமாக உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது. 1958 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. ஏற்கெனவே நடப்பு சாம்பியனான ஸ்பெயினும் முதல் சுற்றில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வெளியேறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.