40 ஆண்டுகளுக்கு பிறகு திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. புதிய தேர் வெள்ளோட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் சத்தியமூர்த்தி பெருமாளுக்கு ஆடி மாதம் காப்பு கட்டி 10 நாள் திருவிழா நடைபெறும். ஆடி கடைசி அன்று சத்தியமூர்த்தி பெருமாள் தேரில் உலா வருவது வழக்கம். இத்தேர் பழுதடைந்து சுமார் 40 ஆண்டுகளாக தேர் ஓடாமல் ஆடி திருவிழா அன்று சத்தியமூர்த்தி பெருமாள் பல்லக்கில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்.தற்போது அரசு உதவியுடன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டு இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சத்தியமூர்த்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் கும்பத்தில் உள்ள பூஜிக்கப்பட்ட புனித நீரை தேரில் அமர்த்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் தேரை திருமயம் எம்.எல்.ஏ.வைரமுத்து வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா, ஹரே ராமா ஹரே கிருஸ்ணா என்ற கோஷங்கள் முழங்க உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே அலங்கரிக்கப்பட்ட புதிய தேர் ஆடி அசைந்து வந்தது. இந்த தேர் நிலையில் இருந்து புறப்பட்டு பெரிய தெரு நடுத்தெரு, சிவன் கோவில் தெரு வழியாக நிலைக்கு சென்றடைந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஒன்றிய குழு தலைவர் முத்துசாமி, துணைத்தலைவர் ராமு, கோவில் உதவி ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் ஞானசேகரன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கோவில் மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், திருமெய்யர் அறக்கட்டளை தலைவர் ஜெயபாலன், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், ஆணையர்கள் அருள்மொழி, ஜெயந்திதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.