ஆடி அமாவாசை: 108 அம்மன் கோவில்களுக்கு 5 நாட்கள் சுற்றுலா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வருகிற 17ந்தேதி ஆடி தொடங்குகிறது. ஆடி அம்மனுக்கு உகந்த மாதமாகும். அந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 அம்மன் கோவிலை தரிசிக்கும் வகையில் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து இந்த சுற்றுலா வாகனம் புறப்பட்டு வெள்ளி மற்றும் திங்கட்கிழமை முறையே இரவு 9 மணி அளவில் சென்னை வந்து சேரும். 5 நாட்களில் 108 அம்மன் கோவில்களை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் நபருக்கு ரூ.4,950 (இருவர் தங்கும் வசதியுடன்) 4 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவருக்கு ரூ.4350. தனி நபருக்கு தனி அறை வசதியுடன் ரூ.5950 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சுற்றுலாவாக மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லை வாயல், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள அம்மன் கோவில்களை தரிசிக்க அழைத்து செல் லப்படுவார்கள். காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 7 மணிக்கு வந்து சேரும் வகையில் ஒரு நாள் சக்தி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒருவருக்கு ரூ.470 கட்டணம் (குளிர் சாதன வசதி இல்லாதது). குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணத்துக்குரூ.550) மேலும் 3 நாட்கள் ஆடி அமாவாசை சுற்றுலா சென்னையில் இருந்து 24ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும், 25ந்தேதி திருபுலானி, தேவிப்பட்டினம், ராமர் பாதம், அனுமன் பாதம், அக்னி தீர்த்தம் முடித்து ராமேஸ்வரத்தில் தங்கி விட்டு 26ந்தேதி காலையில் முன்னோர்களுக்கு திதி செலுத்திவிட்டு பிற்பகல் 2 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு 27ந்தேதி காலை 6 மணிக்கு சென்னை வந்து சேரும். இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு ரூ.2800 கட்டணம் என்று சுற்றுலா வளர்ச்சி கழகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.