உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு: அர்ஜென்டினாவுக்கு ரூ.150 கோடி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.180 கோடிதான் கிடைத்தது. 2வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ரூ.150 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்தை பிடித்த நெதர்லாந்து அணிக்கு ரூ.120 கோடியும், 4வது இடத்தை பிடித்த பிரேசில் அணிக்கு ரூ.108 கோடியும் கிடைத்தது. கால் இறுதியில் தோற்று வெளியேறிய பிரான்ஸ், கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2வது சுற்றில் வெளியேறிய சிலி, உருகுவே, மெக்சிகோ, கிரீஸ், நைஜீரியா, அல்ஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஆகிய 8 அணி களுக்கு தலா ரூ.54 கோடியும் வழங்கப்பட்டன. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, குரோஷியா, கேமரூன், ஆஸ்திரேலியா, ஜவேரி கோஸ்ட், ஜப்பான், ஈகுவடார், ஹோண்டுராஸ், போஸ்னியா, ஈரான், போர்ச்சுக்கல், கானா, ரஷியா, தென்கொரியா ஆகிய 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக கிடைத்தன. கிளப் அணிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு உள்பட இந்த உலக கோப்பையின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். இது கடந்த உலக கோப்பையைவிட 37 சதவீதம் கூடுதலாகும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.