இந்தியா உட்பட 71 நாடுகள் பங்கேற்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஸ்காட்லாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது. 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா பாரம்பரியமிக்க செல்டிக் பாரக் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகை கரென் டன்பார் பாடிய, வெல்கம் டு ஸ்காட்லாந்து என்ற உற்சாகமான பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அவருடன் பிரபல நடிகர் ஜான் பாரோமேன் குழுவினரும் இணைந்து நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர். அதன் பின், ஸ்காட்லாந்தின் பிரபல பாடகர் சூசுன் பாயல், காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ராணி எலிசபெத்தை வரவேற்றுப் பாடினார். ஸ்காட்டிஷ் படை வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி ராணி எலிசபெத்தை வரவற்க, மைதானத்துக்கு மேலே ஒன்பது விமானங்கள் பறந்து கண்களுக்கு விருந்து படைத்தன. ராணி எலிசபெத்தை, காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் துங்கு இம்ரான் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவற்றனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜோதி வான்வெளியில் பறந்து வந்தது. பல்வேறு நாடுகளிலும் சுற்றி வந்த ஜோதியை, ஸ்காட்லாந்தின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் மார்க் பீமன்ட் மினி ஜெட் விமானத்தின் மூலம் அரங்கத்திற்கு கொண்டு வந்தார். அப்போது போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்கள் அணிவகுத்து வந்தனர். இதில் முதலாவதாக இந்திய வீரர்கள் தேசியக் கொடியுடன் அணி வகுத்து வலம் வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர் விஜயகுமார் தேசியக் கொடியை ஏந்தி வர பாலிவுட் இசைப் பின்னணியில் இந்திய வீரர்கள் அணி வகுத்து வந்தனர். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள் என சுமார் எட்டாயிரம் பேர் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர். ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா உட்பட 71 நாடுகள் பங்கேற்கின்றன.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.