மேற்குவங்கத்தில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளியை அடித்தே கொன்ற கிராம மக்கள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மேற்கு வங்காளத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கொலையும் செய்த மூன்று குற்றவாளிகளை கிராமத்தினர் நிர்வாணமாக கட்டி வைத்து கடுமையாக தாக்கியதால் ஒருவர் மரணம் அடைந்ததாகவும், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திடுக்கிடும் தகவல் ஒன்று கூறுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் Kaliabazar என்ற கிராமத்தில் ஏழு வயது சிறுமியை மூன்று நபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் அந்த சிறுமியை மரம் ஒன்றில் தூக்கில் தொங்க செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் சாமியார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தினர் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். சுமார் 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று நபர்களையும் பிடித்து, நிர்வாணப்படுத்தி சிறுமி தூக்கில் தொங்கிய அதே மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதால் ஒருவர் சம்பவ இடத்திலெயே மரணம் அடைந்தார். மேலும் இருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியவாறே இருந்தனர். இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை கிராமத்தினர்களின் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். படுகாயம் அடைந்த இருவரும் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த Sukesh Kumar Jain, East Midnapore Superintendent of Police சிறுமியின் பாலியல் பலாத்காரம் குறித்து சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார் என்றும், மருத்துவமனையில் இருக்கும் குற்றவாளிகள் நினைவு திரும்பியதும் அவர்களிடம் விசாரணை செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், மூன்று பேர்களையும் மிருகத்தனமாக தாக்கிய கிராமத்தினர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.