காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்; ஜெயலலிதா ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. 71 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா பதக்க வேட்டையில் சீராக வீறுநடை போட்டு வருகிறது. தமிழக வீரர் சாதனை 5-வது நாள் போட்டியில் நள்ளிரவில் நடந்த பளுதூக்குதலில் ஆண்களுக்கான 77 கிலோ உடல் எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அவர் மொத்தம் 328 கிலோ தூக்கினார். ஸ்னாட்ச் முறையில் 149 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 179 கிலோவும் அவர் தூக்கினார். இதில் ஸ்னாட்ச் முறையில் சதீஷ்குமார் 149 கிலோ தூக்கியது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நவ்ரு நாட்டை சேர்ந்த யுகோ பீட்டர் 148 கிலோ தூக்கியதே சாதனையாக இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் பரிசு பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ரூ.50 லட்சம் பரிசு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சதீஷ்குமாருக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார். 22 வயதான சதீஷ்குமார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை சிவலிங்கம் (48) ராணுவத்தில் பணியாற்றியவர். இவரும் பளுதூக்கும் வீரர் ஆவார். ராணுவ அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று இருக்கிறார். தற்போது வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். சிவலிங்கத்துக்கு 2 மகன்கள். மூத்த மகன் சதீஷ் போலவே 2-வது மகன் பிரதீப்குமாரும் (19) பளுதூக்கும் வீரராக உள்ளார். சதீஷ்குமார் பங்கேற்ற முதல் காமன்வெல்த் போட்டி இதுவாகும். தனது அறிமுக காமன்வெல்த் போட்டியிலேயே அவர் தங்கப்பதக்கம் வென்றதுடன் சாதனையும் படைத்து அசத்தி இருக்கிறார். தற்போது தெற்கு ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றும் சதீஷ் கடந்த ஆண்டு (2013) நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். சதீஷ் பெற்று கொடுத்தது இந்தியாவுக்கு கிடைத்த 6-வது தங்கப்பதக்கம் ஆகும். இதே பிரிவில் இந்தியாவுக்கே வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. கடந்த முறை தங்கம் வென்ற ஒடிசாவை சேர்ந்த 24 வயதான கட்லு ரவிக்குமார் 317 கிலோ (ஸ்னாட்ச் 142 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 175 கிலோ) தூக்கி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். கனவு நனவாபளு தூக்குதலில் புதிய சாதனை: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்; ஜெயலலிதா ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்புனது தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் கூறும்போது, இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நான் விரும்பியது எனக்கு கிடைத்துள்ளது. தேசிய பளுதூக்கும் வீரரான எனது தந்தை என்னை எப்போதும் பயிற்சி கூடத்துக்கு அழைத்து செல்வார். இப்போது எனது கனவு நனவாகி இருக்கிறது என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.