எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகள் ஒழிப்பு 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளாக மாற்றம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ரெயில்வே துறையை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் இதற்கு தேவையான நிதியை பெருக்க எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்பாஸ்ட் ரெயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக 3 அடுக்கு ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க உள்ளது. இந்த திட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் தெற்கு ரெயில்வேயில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்நிஜாமுதீன் (டெல்லி) மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12617) எஸ்2 என்ற படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பெட்டி குறைந்தது இதன் மூலம் அந்த ரெயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள் 11 ஆக இருந்தது, 10 ஆக குறைந்துள்ளது. அதாவது 2ம் வகுப்பு படுக்கைக்கான 72 டிக்கெட்டுகள், ஏ.சி. கட்டணத்துக்கு மாறிவிட்டது. இந்த ரெயிலில் எர்ணாகுளத்தில் இருந்து டெல்லிக்கு 2ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.925. ஆனால் மூன்றடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.2,370 ஆகும். அந்த குறிப்பிட்ட 2ம் வகுப்பு பெட்டிக்கு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு தட்கல் முறையில் மாற்று இடம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இதுபோல மாற்றி வழங்கியதால் ஒரே குடும்பத்தினர் பல்வேறு பெட்டிகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. முடிந்தவரை ஒரே பெட்டியில் படுக்கை ஒதுக்குவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை ரெயிலிலும் அதேபோல சென்னை எழும்பூர்மங்களூர் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16859) ரெயிலில் எஸ்7 என்ற 2ம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமையும், மங்களூர் சென்டிரல்சென்னை எழும்பூர் (வண்டி எண்:16860) எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்9 என்ற 2ம் வகுப்பு பெட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதலும் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி4 என்ற ஏ.சி.சேர்கார் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரெயில்களிலும் 2ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்றிவிட்டு, ஏ.சி. பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தயாரிப்பும் நிறுத்தம் அதேபோல 2ம் வகுப்பு பெட்டிகள் தயாரிப்பதை குறைக்கவும், அதற்கு பதிலாக ஏ.சி. பெட்டிகளை அதிகமாக தயாரிக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாலக்காடு, திருவனந்தபுரம் ரெயில்வே டிவிஷனில் எந்த 2ம் வகுப்பு பெட்டி தயாரிக்கவும் அனுமதி கொடுக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார். மாற்றப்படும் 2ம் வகுப்பு பெட்டிகளில் இருக்கும் நடு படுக்கை அகற்றப்பட்டு, அந்த பெட்டிகள் பயணிகள் ரெயில்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். ஏழைகளுக்கு பாதிப்பு இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும். அதே சமயம் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர ரெயில் பயணிகளுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். எனவே இந்த திட்டத்திற்கு ரெயில் பயணிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.