டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை மத்திய அரசு 2 கட்டங்களாக நடத்துகிறது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.57.84க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மும்பையில் ரூ.66.01க்கும், மராட்டியத்தின் மற்ற பகுதிகளில் ரூ.65.99க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மேற்கு வங்காளத்தில் ரூ.62.64க்கும், தமிழ்நாட்டில் ரூ.61.70க்கும், மத்திய பிரதேசத்தில் ரூ.63.94க்கும் விற்கப்படுகிறது. மேலும் உத்தரகாண்டில் ரூ.62.21க்கு விற்பனை செய்யப்படும் டீசல், உத்தரபிரதேசத்தில் ரூ.63.25க்கும், கர்நாடகத்தில் ரூ.62.85க்கும், ஆந்திராவில் ரூ.63.04க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல டெல்லியில் ரூ.73.54க்கு விற்பனையாகும் பெட்ரோல், மும்பையில் ரூ.81.68க்கும், மராட்டியத்தின் பிற பகுதிகளில் ரூ.82.16க்கும் விற்கப்படுகிறது. ரூ.7க்கு மேல்... பெட்ரோலிய பொருட்களுக்கு ஒவ்வொரு மாநிலமும் விதிக்கும் வரியை பொறுத்து இந்த விலை மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக விற்பனை வரி அல்லது வாட் வரி, நுழைவு வரி, நகர்ப்புற சுங்கவரி என ஒவ்வொரு மாநிலமும் பன்முக வரிகளை விதித்து, டீசல் விலையை ரூ.7க்கும் மேல் உயர்த்தியுள்ளன. ஆனால் மாநிலங்கள் இந்த வரிகளை நீக்கினால் பெட்ரோல், டீசலின் விலை குறைவதுடன், அதன் பலனை உள்ளூர் மக்கள் அனுபவிப்பார்கள் என மத்திய அரசு கருதுகிறது. எனவே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநிலங்களுக்கு கடிதம் எனவே மோடியின் நிர்வாக முறையான ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசின் சம பங்குதாரர்கள் என்ற அணுகுமுறையின் படி, இதற்கான நடவடிக்கைகளை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக கடந்த 9ந் தேதி மாநிலங்களுக்கு பெட்ரோலியத்துறை கடிதம் அனுப்பியது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலமும் சமமான வரிவிதிப்பு கொள்கையை அமல்படுத்துவதன் தேவையை உணர்த்தும் வகையிலும், மாநிலங்களின் பன்முக வரிகளை நீக்குவது தொடர்பாகவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு இதைத்தொடர்ந்து டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக அசாம், பீகார், அரியானா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் 30ந் தேதி (நாளை) மற்றும் 31ந் தேதி நடக்கிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5 மற்றும் 6ந் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநில அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அதிகாரி தகவல் இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, பல்வேறு வரிகளை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் விற்பனை அளவு குறைவாக இருப்பதை எங்களுடைய அனுபவங்களில் உணர்ந்துள்ளோம். இதனால் வரி இல்லாத அல்லது குறைவான வரி விதிக்கப்பட்ட, அருகில் உள்ள மாநிலங்களே பயனடைகின்றன என்றார். மேலும் அவர் கூறுகையில், வாடிக்கையாளர் நலன்களுக்கே புதிய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அரசின் கொள்கை முடிவுகள் அனைத்தும் அவர்களை சுற்றியே பின்னப்பட்டு உள்ளன. இந்த வரிகளால் பக்கத்து மாநிலங்கள் பயனடையுமானால், அதிக வரி விதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பெருத்த இழப்பே ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.