காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

காமன்வெல்த் போட்டியில் இறுதிச்சுற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் விஜய் குமாரின் தோல்வி அதிர்ச்சியை அளித்தாலும் அதிலிருந்து இன்று விரைவாக மீட்டுக் கொண்டு வந்துவிட்டனர் இந்திய வீரர்கள். முன்னதாக, இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் மனாவ்ஜித் சந்து ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் டைமண்டை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஹர்பீத் சிங் வெள்ளியை வென்றார். இந்நிலையில், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர் நம் வீரர்கள். மாலை முதல் நடைபெற்று வந்த 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் சஞ்சீவ் ராஜ்புட் மற்றும் ககன் நரங் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வந்தனர். தகுதிச் சுற்றில் எளிதாக முன்னேறிய அவர்கள் 35 ஷாட்களுக்கு பிறகு 2 மற்றும் 3 வது இடத்திற்கு முன்னேறினர். இறுதியில், சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளியையும், ககன் நரங் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளதால் பதக்கப்பட்டியலில் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.