புனேயில் நிலச்சரிவு: 15 பேர் பலி- 150 பேரின் கதி என்ன?

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புனேவில் கனமழைக் காரணமாக இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 10 பேர் மண்ணில் புதைந்து பலியாகினர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சுமார் 50 வீடுகள் மண்ணில் புதையுண்டதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 300 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள ஆம்பி கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 50 குடிசை வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 150 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் குழு உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் அங்கு விரைந்துள்ளது. இதனிடையே, இன்று காலை 5 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுவிட்டதாகவும், மக்கள் தூக்கத்தில் இருந்த காரணத்தால், அவர்களால் சம்பவத்தின்போது, வெளியேற கூட முடியவில்லை என்றும் உள்ளூர் போலீஸ் அதிகாரி வினோத் பவார் கூறியுள்ளார். மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவுகான், துணை நிலை முதலமைச்சர் அஜித் பவார் உள்ளிட்டோர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள அம்பீகான் தாலுகாவின் பல இடங்களில், சாலை வசதி இல்லாதாலும் தொடர் மழை பெய்து வருவதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 50 வீடுகளின் இடுபாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதால், மண்ணில் புதைந்தவர்களின் நிலை குறித்து அச்சம் நிலவுகிறது. தொடர்ந்து சுற்றுவட்டார மற்றும் மலையோர கிராமங்களில் உள்ள மக்களை பாதிகாப்பான பகுதிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியோரை உயிருடன் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிக்கு 50 ஆம்புலன்ஸுகளும், இடிபாடுகளை அகற்றும் இயந்திரங்கள் அனுப்பட்டுள்ளதாகவும், இந்த பணியில், தனியார் தொண்டு நிறுவனங்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சவுரவ் ராவ் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.