பாராளுமன்றத்துக்கு சரியாக வராத பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கை, குறிப்பாக மிக குறைந்த நாட்களே வருகை புரிந்த சில எம்.பி.க்களின் செயல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடுவிடம் பாராளுமன்ற இரு அவைகளுக்கும் கட்சி எம்.பி.க்களின் வருகை பதிவேட்டை கவனிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல பாராளுமன்ற கட்சி கூட்டத்துக்கு வராத எம்.பி.க்களின் பட்டியலையும் தயாரிக்கும்படி கூறியுள்ளார். நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருக்கும் பாராளுமன்ற கட்சி கூட்டத்துக்கு வரும் எம்.பி.க்களின் பெயர்களை உறுதிப்படுத்தவும் வெங்கையா நாயுடுவுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களுக்கும் வாட்ஸ் அப் தகவல் மூலம் கூட்டத்துக்கு வருகை குறித்து கேட்கப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் ஆம், அல்லது இல்லை என்ற தகவல் தரவேண்டும். ஏற்கனவே பல எம்.பி.க்கள் ஆம் என தகவல் கொடுத்துவிட்டனர். பேஸ்புக் சமூக வலைதளத்தில் கட்சியின் எம்.பி.க்களுக்கு என தனியாக ஒரு பக்கம் தொடங்கவும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம், கட்சியின் ஒழுக்கத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் எம்.பி.க்களை பிரதமரே நேரடியாக எச்சரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.பி.க்களின் செயல்பாடுகள் அவர்களது பதிவு அட்டையில் இடம்பெறும். அதன் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் முக்கிய பணிகளுக்கு அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.