அரசு பங்களாக்களை காலி செய்யுமாறு முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாராளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 26ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தங்கள் பதவிகளை இழந்து 2 மாதங்கள் ஆகியும் முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேர் டெல்லியில் தாங்கள் வசித்து வரும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் உள்ளனர். அவர்கள், ஜெய்பால் ரெட்டி, அஜித் சிங், கிருஷ்ணா தீரத், சச்சின் பைலட், பல்லம் ராஜூ, கிரிஜா வியாஸ், பரூக் அப்துல்லா, பெனி பிரசாத் வர்மா, கபில் சிபல், ஸ்ரீகாந்த் ஜேனா உள்ளிட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தாங்கள் வசித்து வருகிற பங்களாக்களை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சேத கட்டணம் வசூலிக்கப்படும் அவர்கள் ஜூலை மாதம் 26ந் தேதி வரையில் ஒரு மாத காலத்துக்கு அனுமதியற்று தங்கி இருந்ததற்கு, ரூ.20 லட்சத்து 92 ஆயிரத்து 463 சேத கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த தகவலை பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்தார். மேலும் 21 முன்னாள் மந்திரிகள் இந்த பதிலில், மேலும் 21 முன்னாள் மத்திய மந்திரிகள் பொது தொகுப்பில் உள்ள பங்களாக்களில் தங்கி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு சம்மந்தப்பட்ட வீட்டு வசதி கமிட்டி ஒதுக்கியுள்ள வீடுகளுக்கு குடி பெயர்வதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த 21 முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி, வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கே.வி.தாமஸ், கே.ரகுமான்கான், கே.எச்.முனியப்பா, சசி தரூர், கே.சிரஞ்சீவி, முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ராஜீவ் சுக்லா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.எச்.கான் சவுத்ரி, நினோன் எர்ரிங், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், கே.சி.வேணுகோபால், ஜே.சீலம் ஆகியோர் ஆவார்கள். 683 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் டெல்லியில் 683 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் (டைப் 1 முதல் 7 வரையிலானவை) முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அனுமதியின்றி தங்கி வருகிறார்கள். இவர்கள் ஒரு மாதம் முதல் 21 வருடங்கள் இப்படி வசித்து வருகிறார்கள். இவர்களும் வீடுகளை காலி செய்வதற்கு நோட்டீஸ் வழங்கி இருப்பதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.