புனே நிலச்சரிவு இடத்தை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 44 வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தில் 200 பேர் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. 15 பேரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவம் அதிகாலை 5 மணிக்கு நடந்தது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இதனால் ஏராளமானோர் தங்களது வீட்டுக்குள்ளே சமாதியானார்கள். மேலும் பலர் தூக்கம் கலைந்து அலறியடித்து கொண்டு வெளியேறினார்கள். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 300 பேர் வரவழைக்கப்பட்டனர். மேலும் துணை ராணுவத்தினரும் மீட்பு பணிக்காக விரைந்தார்கள். அங்கு மீட்பு பணி துரிதகதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு சம்பவம் பற்றி தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி கவலை அடைந்தார். சம்பவ இடத்துக்கு நேரில் செல்லும்படி உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மீட்பு பணிகளை பார்வையிட ராஜ்நாத் சிங் சம்பவ இடத்திற்க்கு சென்றார். நிலச்சரிவை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது; நிலச்சரிவால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 இலட்சம் வழங்கபடும் என்று தெரிவித்தார். இந்த நிலச்சரிவில் சிக்கி பலியான குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். நிலச்சரிவு சம்பவம் பற்றி தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை அடைந்தார்.மாநில அரசுக்கு பேரிடர் குழுக்களை உடனடியாக அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மேலும் சம்பவ இடத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இந்த நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்ட பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.